லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் இன்று (பிப்.,28) நடக்கும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வந்தனர். இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. சிறப்பாக விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள், 50 ஓவர்களில் 273 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி வீரர்கள் களமிறங்கினர். இந்நிலையில், 12.5 ஓவர்களில் 109 ரன்களுக்கு ஒரு விக்கெட் என இருந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் பாதித்துள்ளது.