அதிமுக-விலிருந்து நீக்கப்பட்ட திரு.A.V.ராஜீ என்பவர். திரைத்துறை குறித்து சில தரமற்ற, அவதூறுகளை கூறியிருக்கிறார். 2017ல் கூவத்தூரில் நடந்த நிகழ்வில் நடிகை திரிஷா அவர்களை சம்மந்தப்படுத்தி ஒரு அவதூறை கூறியிருக்கிறார். இத்தகைய அநாகரிகமான கீழ்தரமான செயலை, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது. "பெண்கள் மீதும் அவர்களின் பெண்மை மீதும்" நடத்தப்படுகின்ற அவதூறு தாக்குதலை இரும்பு கரம் கொண்டு களைய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுக்களுக்கு பணிவன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றோம் என FEFSI அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.