தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகர் கிச்சா சுதீப்பின் தாயார் சரோஜா வயது மூப்பு காரணமாக இன்று (அக்.20) காலமானார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.