ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சென்னை போயஸ்கார்டன் இல்லத்தின் முன் குவிந்துள்ள ரசிகர்களுக்கு நடிகர்
ரஜினிகாந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இன்று காலை 7 மணி முதலே ரசிகர்கள் அதிகளவில் திரண்டு வந்து புத்தாண்டு வாழ்த்துக்களை பெற காத்து நின்றனர். இந்த நிலையில், தற்போது
ரஜினிகாந்த் தனது வீட்டின் முன் நின்றுகொண்டு ரசிகர்களை நோக்கி கையசைத்தும், வணக்கம் செலுத்தியும் வாழ்த்து தெரிவித்தார். ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் ரசிகர்கள் ரஜினிகாந்திடம் வாழ்த்து பெற வருகை தருவார்கள்.