மகாராஜா படத்தை பாராட்டிய நடிகர் கவின்

66பார்த்தது
மகாராஜா படத்தை பாராட்டிய நடிகர் கவின்
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'மகாராஜா' படத்தை பார்த்த நடிகர் கவின் மகாராஜா படம் குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "மகாராஜா படத்தின் எமோஷனல் தாக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லை. விஜய் சேதுபதி அருமையாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தைப் பார்த்த பின் என் இதயம் கனமாக இருக்கிறது. ஆனாலும் இயக்குனர் நித்திலனுக்காக மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளர்களான ஜெகதீஷ், சுதன் ஆகியோருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி