நடிகர் சார்லி இல்ல திருமண விழாவில் முதல்வர்

57பார்த்தது
நடிகர் சார்லி இல்ல திருமண விழாவில் முதல்வர்
நடிகர் வி.டி.எம்.சார்லி - ஏ.அந்தோணியம்மாள் தம்பதியின் இளைய மகன் எம்.அஜய் தங்கசாமிக்கும், பெர்மிசியா டெமிக்கும் சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நேற்று (ஜூன் 09) காலை திருமணம் நடந்தது. அதனைத்தொடர்ந்து எம்.அஜய் தங்கசாமி - பெர்மிசியா டெமி திருமண வரவேற்பு நிகழ்ச்சி, மயிலாப்பூரில் உள்ள ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது.இதில், திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.

தொடர்புடைய செய்தி