கர்நாடக நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த ஓட்டுநர் சரவணனின் உடலை நாமக்கல் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடகாவில் கடந்த 16ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழக டேங்கர் லாரி ஓட்டுநர்கள் 3 பேர் உயிரிழந்தனர். 3 பேரில் சின்னண்ணன், முருகனின் உடல்கள் ஏற்கெனவே கொண்டு வரப்பட்ட நிலையில் சரவணனின் உடலை கொண்டுவர அரசு செய்து வருவதாகவும் வருவாய்த்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.