மோடி ரோடு ஷோ நிகழ்ச்சியில் விபத்து

64261பார்த்தது
மத்தியபிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் ரோட் ஷோவின் போது மேடை உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. ஜபல்பூரில் பிரதமர் இன்று 'சாலை நிகழ்ச்சி' நடத்தினார். அவரை பார்ப்பதற்காக பெரிய கூட்டம் சாலையின் இரு பக்கமும் திரண்டு இருந்தது. அப்போது, அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடை இடிந்து விழுந்ததால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி