அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் உயிரிழப்பு அதிகரிப்பு

57பார்த்தது
அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் உயிரிழப்பு அதிகரிப்பு
அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் சந்தேக மரணங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2024ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை சுமார் 10 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று வாஷிங்டன் ஓஹியோவில் உள்ள க்ளீவ்லேண்டில் உமா சத்யசாய் காடே என்கிற முதுகலை மாணவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் சந்தேக மரணம் அடைவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி