தமிழ் யூடியூப் பிரபலம் உயிரிழப்பு (வீடியோ)

78657பார்த்தது
25 தோசைகள் சாப்பிடுவேன் என்று கூறி யூடியூபில் பிரபலமடைந்த பிரணவ் என்ற இளைஞர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார். விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் பிரணவின் தாயும் சகோதரியும் கலந்து கொண்டு அவர் 25 தோசை சாப்பிடுவார் என்று பேசினர். அதன் பின்னர் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பிரணவ் பேட்டியளித்து பிரபலமானார். இந்நிலையில், கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி அவர் குரோம்பேட்டை அருகே ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி: BEHINDWOODS