நாதக நிர்வாகிகள் பலர் சீமான் மீது குற்றம்சாட்டி, வரிசையாக அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். இந்நிலையில், இன்று (நவ,22) நாம் தமிழர் கட்சியில் இருந்து கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் உள்பட அவரது தலைமையில் நிர்வாகிகள் சிலர் விலகியுள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சீமான், “நாம் தமிழர் கட்சியினர் யாரும் விலகவில்லை; நாங்கள்தான் மற்ற கட்சிகளில் உளவு பார்ப்பதற்காக அனுப்பி வைக்கிறோம்” என கூறியுள்ளார்.