பற்றி எரிந்த ஓலா ஸ்கூட்டர் (வீடியோ)

73பார்த்தது
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஓலா ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு மாணவர்கள் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த போது ஸ்கூட்டரில் வெப்பம் அதிகமாகி புகை வரவே, ஸ்கூட்டரை நிறுத்தியுள்ளனர். அவர்கள் இருவரும் இறங்கிய அடுத்த கணம் ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்துள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காட்டாக்கடை பகுதி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

தொடர்புடைய செய்தி