ஆடிப்பூரத்தன்று ஆண்டாள் வழிபாடு செய்வது அவசியம். கோயிலுக்கு சென்றோ அல்லது வீட்டிலேயோ அன்னை அருளிய தமிழ்ப் பாசுரங்களைப் பாராயணம் செய்வதன் மூலம் அருள்பெறலாம். குறிப்பாகத் திருமண வரம் வேண்டுபவர்கள் அன்னை அருளிய திருப்பாவைப் பாடல்களை ஆடிப்பூர நாளின் காலையில் எழுந்து பாராயணம் செய்தால் பெரிய அளவில் பலன் கிடைக்கும். ஆடிப்பூர தினம் என்றில்லை, எல்லா நாளுமே திருப்பாவைப் பாடல்களைப் பாராயணம் செய்வது நன்மை தரும்.