உத்திரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது காதலியைப் பார்க்க நினைத்துள்ளார். ஆனால், யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என எண்ணிய அவர் இஸ்லாமிய பெண்கள் அணியும் பர்தாவை அணிந்துகொண்டு, காதலியின் ஏரியாவுக்குச் சென்றுள்ளார். காதலி வீட்டின் அருகே நடந்துகொண்டே இருந்துள்ளார். இதனைப் பார்த்து சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், குழந்தைகளை கடத்திச் செல்பவர் என நினைத்து அந்த இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர்.