கர்ப்பமாக்கிய பெண்ணை ஏற்க மறுக்கும் இளைஞர்

67பார்த்தது
கர்ப்பமாக்கிய பெண்ணை ஏற்க மறுக்கும் இளைஞர்
கோவையை சேர்ந்த 28 வயது இளம்பெண் வேலூர் அருகே உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது ராஜேஷ் (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் இருவரும் காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டனர். இதில் அந்தப் பெண் கர்ப்பமாகியுள்ளார். இந்த நிலையில் தற்போது ராஜேஷ் அப்பெண்ணுடன் வாழ மறுத்து, பெண் கர்ப்பத்துக்கு தான் காரணம் இல்லை என கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி