நிழல் பந்தலில் லாரி மோதி விபத்து

65பார்த்தது
நிழல் பந்தலில் லாரி மோதி விபத்து
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சிக்னலில் அதிக அளவு வாகன ஓட்டிகள் நின்று செல்வார்கள். இந்த கோடை வெயிலால் அவர்கள் பெரும் அவதிபட்டு வருகின்றனர். இதன் காரணமாக சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக அங்கு நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், இன்று(மே 13) அந்த பந்தலின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. தொடர்ந்து, இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி