தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து - 7 பேர் பலி

50பார்த்தது
டெல்லியை அடுத்த அலிப்பூரில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று மாலை 5.30 மணியளவில் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 22 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த வீரர்கள், போராடி தீயை கட்டுப்படுத்தினர். தீ விபத்தில் சிக்கி இறந்தவர்களின் சடலத்தை மீட்ட வீரர்கள், அவற்றைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தீ விபத்திற்கான விசாரணையும் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி