திருச்சி ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெட்டப்பட்ட ஆசிரியர் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பள்ளியில் வைத்து மாணவர் ஒருவர் அறிவாளால் வெட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மோதலால், மாணவர் ஒருவரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.