உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் மிகப்பெரிய மலைப்பாம்பு ஒன்று வனப்பகுதியில் இருந்து மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்றுள்ளது. மலைப்பாம்பை பார்த்து கிராம மக்கள் அனைவரும் பீதியடைந்தனர். அதை பிடிக்க சில இளைஞர்கள் தங்களால் இயன்றவரை முயன்றனர். அந்த மலைப்பாம்பு வேகமாக அவர்களிடமிருந்து தப்பி ஒரு சதுப்பு நிலத்திற்கு சென்றது. அப்பகுதி மக்கள் மலைப்பாம்பை பிடித்து அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.