கர்நாடகா: பெங்களூருவில் தெரு நாய் ஒன்று பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெயநகரைச் சுற்றியுள்ள நாய்களுக்கு உணவளிக்க வித்யா என்ற பெண் சென்றபோது, நாயுடன் ஒரு ஆண் உடலுறவு கொள்வதைக் கண்டார். உடனடியாக நாயை மீட்ட வித்யா, அதன்பின், அந்த நபர் பிடித்து ஜெயநகர் காவல் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இந்நிலையில், மீட்கப்பட்ட நாய்அந்தரங்க பகுதிகளில் ஏற்பட்ட காயத்துடன் துடிக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.