டெல்லியின் ரன்ஹோலா கோட்லா பகுதியில் நேற்று (ஆகஸ்ட் 10) மதியம் 1.30 மணியளவில் விஹார் பிஎச்-2 பகுதியில் உள்ள மைதானத்தில் 13 வயது சிறுவன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது மைதானத்தில் மின்சார கம்பியை ஏற்றிச் செல்லும் இரும்புக் கம்பத்தில் இருந்து மின்சாரம் தாக்கியது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்துள்ளார். விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.