மதுரை மாநகராட்சியில் மாடு, நாய், பன்றி, குதிரை போன்றவை வளர்க்க ஆண்டுதோறும் கட்டணம் செலுத்தி, உரிமம் பெறுவதோடு சாலைகளில் அவற்றை சுற்றத்திரிய விட்டால் ரூ.2,500 முதல் ரூ.20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என கால்நடைகள் வளர்ப்போருக்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மாடுகளுக்கு ரூ.100, கன்று ரூ.50, குதிரை ரூ.150, கழுதை ரூ.150, நாய்கள் ரூ.100, பன்றி ரூ.100 உரிமம் தொகை செலுத்தி அதனை வளர்க்கலாம். உரிமம் பெறாத கால்நடைகளை வளர்த்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.