பாம்புப்பிடி வீரரை கடித்த ராஜநாகம் உயிரிழப்பு

62பார்த்தது
பாம்புப்பிடி வீரரை கடித்த ராஜநாகம் உயிரிழப்பு
மத்தியப்பிரதேசம் மாநிலம் பந்தெல்கண்ட் பகுதியில் சாகர் குராய் என்ற பாம்புப்பிடி வீரரை கடித்த ராஜநாகம் உயிரிழந்த வினோத சம்பவம் நடந்துள்ளது. ராஜ நாகத்தை சாகர் பிடிக்க முயன்றபோது, அது அவரை 2 முறை கடித்துள்ளது. எனினும் அதனை பிடித்து பிளாஸ்டிக் பெட்டியில் அடைத்துள்ளார். அதன்பின் அந்த ராஜநாகம் இறந்துள்ளது. இதையடுத்து, போலீஸ் விசாரணையில் ராஜநாகம் அடைக்கப்பட்ட பெட்டியில் காற்றோட்டம் இல்லாததால் ஆக்சிஜன் இல்லாமல் பாம்பு இறந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி