மகளின் திருமண ஏற்பாடுகளை செய்து வந்த தந்தை வீட்டின் முன் கார் மோதியதில் உயிரிழந்தார். கேரளாவின் கண்ணூர் பாவனூர்மோட்டையைச் சேர்ந்தவர் பி.பி.வத்சன். இவர் தனது வீட்டு முற்றத்தில் சுத்தீகரிப்பு பணிகளை செய்து வந்துள்ளார். தொடர்ந்து பக்கத்து வீட்டில் இருந்து குப்பைகளை அகற்றுவதற்காக தள்ளுவண்டி வாங்க சென்ற போது கார் மோதியது. உடனே கண்ணூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் காப்பாற்ற முடியவில்லை. மகளின் திருமணம் வரும் 28ஆம் தேதி நடைபெற இருந்தது.