பிரபல நடிகைக்கு திடீர் திருமணம்

72842பார்த்தது
பிரபல நடிகைக்கு திடீர் திருமணம்
'முதல் நீ முடிவும் நீ’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதலில் கவனம் ஈர்த்த நடிகை மீதா ரகுநாத் தொடர்ந்து சென்ற ஆண்டு நடிகர் மணிகண்டனுடன் நடித்த ‘குட் நைட்’ திரைப்படம் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடைந்தார். இப்படிப்பட்ட மனைவி வேண்டும் என இணையவாசிகள் போட்டி போட்டுக் கொண்டு பதிவிடும் வகையில், இந்தப் படத்தின் மூலம் பிரபலமானார். இதனையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மீதா ரகுநாத்தின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகின. இந்நிலையில் இந்நிலையில் மீதா ரகுநாத்தின் திருமணம் இன்று இரு வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் சூழ கோலாகமாக தற்போது நடைபெற்று முடிந்துள்ளது.

தொடர்புடைய செய்தி