குடிபோதையில் மகளை தீயில் தூக்கி வீசிய தந்தை

48484பார்த்தது
குடிபோதையில் மகளை தீயில் தூக்கி வீசிய தந்தை
தெலுங்கானா: காமரெட்டி மாவட்டத்தில் உள்ள பிர்கூர் பரங்கேட்கி கிராமத்தில் குடி போதையில் இருந்த தந்தை, தனது ஏழு வயது மகளை தீயில் தூக்கி வீசிய சம்பவம் அரங்கேறியுள்ளது. சைலு என்பவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். நேற்று வீட்டின் அருகிலேயே சிறுமிகள் விளையாடிக்கொண்டிருந்தனர். அதேநேரம் இவர்களது வீட்டுக்குப் பக்கத்தில் கங்காதர் என்பவரின் கொட்டகை தீப்பிடித்து எரிந்தது. சைலுவின் மகள்தான் இதற்கு காரணம் என கங்காதர் குற்றம் சாட்டினார்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. குடிபோதையில் இருந்த சைலு, ஆத்திரத்தில் தனது மகள் அங்கிதாவை (7) தீயில் வீசினார். அதிர்ச்சியடைந்த கங்காதர் உடனடியாக தீயில் குதித்து சிறுமியை காப்பாற்றினார். தொடர்ந்து பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட் நிலையில், மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி