48 மணி நேர வேலையால் மருத்துவர் உயிரிழப்பு - ராமதாஸ் கண்டனம்

63பார்த்தது
48 மணி நேர வேலையால் மருத்துவர் உயிரிழப்பு - ராமதாஸ் கண்டனம்
தொடர்ந்து 48 மணி நேரம் பணி செய்ததால் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவம் பயின்று வந்த தமிழழகன் என்ற மருத்துவர் உயிரிழந்ததால், மனித உரிமைகளை மதித்து மருத்துவ
மாணவர்களுக்கு 8 மணி நேர பணியை அரசு உறுதி செய்ய வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் தொடர்ச்சியாக 48 மணி நேரத்திற்கும் மேலாக பணி செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார். உயிர் காக்க வேண்டிய மருத்துவர்களே ஓய்வின்றி பணி செய்வதால் உயிரிழக்கும் நிலைக்கு ஆளாக்கப்படுவது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.