2 கி.மீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. முன்னதாக 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது நகரும் வேகம் 12 கி.மீ. ஆக சற்று அதிகரித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.