தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வட திசை நோக்கி நகர்வதால் கனமழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் வரும் 17-ம் தேதி அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை நெருங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சென்னைக்கு வடக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.