எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்சை நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், ராகுல் காந்தி என்னை வந்து சந்தித்தது, அந்த கடவுளே நேரில் வந்தது போல் இருந்தது. எனக்கு உதவுமாறு அவரிடம் கோரிக்கை வைத்தேன். மற்ற அரசியல்வாதிகளைப்போல, இங்கு வந்து சென்றதை அவர் மறந்துவிடுவார் என நினைத்தேன். ஆனால், அவர் மிகவும் கனிவானவர். இவரைப் போன்ற ஒரு அரசியல்வாதியை நான் பார்த்ததில்லை. அவர் அளித்த தையல் மெஷின் மூலம் நான் நிறைய வருமானம் ஈட்டுவேன் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.