பௌர்ணமி, வார விடுமுறையை முன்னிட்டு பல்வேறு இடங்களுக்கு 810 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; 23/02/2024 (வெள்ளிக்கிழமை) 24/02/2024 (சனிக்கிழமை / பௌர்ணமி) மற்றும் 25/02/2024 (ஞாயிறு) அன்று சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும். இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.