16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை

80386பார்த்தது
16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே 16 வயது சிறுமியை 17 வயது சிறுவர்கள் இருவர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்று மாலை சிறுமியை கடத்திய இருவர் வனப்பகுதிக்கு கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் சிறுமியை நிர்வாணமாக வீடியோ எடுத்து சமூகவலைத்தளத்தில் பரப்பியுள்ளனர். அந்த விடியோவை 18 வயதிற்கு மேல் உள்ள இரண்டு இளைஞர்களுக்கு அனுப்பி அவர்களை வரவழைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இரண்டு சிறுவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 18 வயது இளைஞர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி