தக் லைப் படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்லும் கமல்

78பார்த்தது
தக் லைப் படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்லும் கமல்
கமலஹாசன் நடிப்பில் உருவாகும் 'தக் லைஃப்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெறுவதால் அதிலும் பங்கேற்று வருகின்ற மக்களவைத் தேர்தல் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார். மநீமவுக்கு தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கமல் மீண்டும் வருகின்ற 29ஆம் தேதி வெளிநாடு செல்ல உள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர். அதற்குள் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கான இடம் உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி