ரயிலில் 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை

58பார்த்தது
ரயிலில் 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் செல்லும் ரயிலில் கடந்த மே மாதம் 18ஆம் தேதி 16 வயது சிறுவன் பயணித்த போது உடன் பயணித்த நபர் சிறுவன் மீது கை வைத்து பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதனால் கோபமடைந்த சிறுவன் அந்த நபரை தள்ளிவிட்டு அங்கிருந்து எழுந்துச் சென்றார். இது குறித்த புகாரின் பேரில் குற்றவாளியை போலீசார் தேடி வரும் நிலையில் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து தற்போது பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். சந்தேக நபருக்கு 50 வயது இருக்கும் எனவும் சம்பவத்தின் போது பழுப்பு நிற ஷார்ட்ஸ் மற்றும் வெள்ளை நிற சட்டை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி