புதுச்சேரி காட்டேரிக்குப்பம் கிராமத்தில் பத்மாவதி அம்மாள் (83) என்ற மூதாட்டி உயிரிழந்த நிலையில் அவரது கடைசி ஆசைப்படி கண்கள் தானம் செய்யப்பட்டது. உடல் உறுப்பு தானத்தில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த மூதாட்டியின் விருப்பத்தை அவரது குடும்பத்தினர் நிறைவேற்றியுள்ளனர். இதனை தொடர்ந்து அரவிந்த் கண் மருத்துவமனைக்கு மூதாட்டியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது. அவரது குடும்பத்தினருக்கு மருத்துவக்குழுவினர், சமூக ஆர்வலர்கள் ஆறுதல் கூறியதுடன் இந்த செயலை பாராட்டியுள்ளனர்.