ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலையில் இன்று (டிச.20) அதிகாலை ஒரு ரசாயன லாரி மீது மற்ற லாரிகள் மோதி ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். பெட்ரோல் பங்க் அருகே நின்ற சிஎன்ஜி நிரம்பிய டேங்கர் லாரி மீது மற்றொரு லாரி வந்து மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களது குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.