ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் ஆறு தொழிலாளர்கள் மற்றும் ஒரு காஷ்மீரி மருத்துவர் உட்பட 7 பேர் கொல்லப்பட்டனர். ஐந்து பேர் காயமடைந்தனர். கந்தர்பால் மாவட்டத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது 2 பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். தப்பிய பயங்கரவாதிகளை ராணுவம், சிஏபிஎஃப், ஜம்மு காஷ்மீர் காவல்துறை இணைந்து தேடி வருகின்றனர்.