ஓமன் நாட்டில் ஏசிசி டி20 பிரீமியர் டிராபி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கத்தாருக்கு எதிரான டி20 போட்டியில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசி நேபாள் வீரர் திபேந்திர சிங் ஐரிசாதனை புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். இதில் போட்டியின் 20ஆவது ஓவரை கத்தார் அணி வீரர் கம்ரான் கான் வீசினார். அந்த ஓவரில் மட்டும் திபேந்திர சிங் ஐரி 6, 6, 6, 6, 6, 6 என்று வரிசையாக 6 சிக்ஸர்கள் விளாசி புதிய சாதனை படைத்தார். ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசிய முதல் நேபாள் வீரர் என்ற சாதனையை படைத்தார். 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் எடுத்து.