வானில் ஒரே நேர்கோட்டில் இன்று (ஜன.22) செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி, நெப்ட்யூன், யூரேனஸ் ஆகிய 6 கோள்கள் வரவுள்ளன. இன்று மாலை 6 மணி முதல் இந்த மாதம் இறுதி வரை இதனை காண முடியும் என தமிழ்நாடு அறிவியல் மைய அதிகாரிகள் கூறியுள்ளனர். சூரியன் மறைவுக்குப் பிறகு வெள்ளி மற்றும் சனி கோள்கள் தென்படும். அதன்பிறகு செவ்வாய் மற்றும் வியாழன் கோள்கள் தென்படும். இந்தக் கோள்களை வெறும் கண்களில் காண முடியும். யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கோள்களை பைனாகுலரில் மட்டுமே காண முடியும்.