படகு ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி..?

71பார்த்தது
படகு ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி..?
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் கலாஷி அருகே நேற்று (மே 21) மாலை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 6 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) குழுக்கள் தேடுதல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

படகு கவிழ்ந்த போது அதில் 7 பேர் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களில் ஒருவர் பாதுகாப்பாக நீந்தி கரை திரும்பியுள்ளார். ஆனால் ஆறு பேர் இன்னும் காணவில்லை. அவர்கள் உயிர் தப்பினார்களா? அல்லது நீரில் மூழ்கி உயிரிழந்தார்களா? என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்தி