தமிழகத்தில் போதை பொருட்கள் தடுப்பு பிரிவினர் தீவிரமாக செயல்பட்டு போதை பொருட்களை கைப்பற்றிவருகின்றனர் . அந்த வகையில், தென்மண்டல காவல் எல்லைக்கு உட்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், தேனி ஆகிய மாவட்ட காவல் நிலையங்களில் 495 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 5,191 கிலோ கஞ்சாவை நெல்லை சரக டிஐஜி மூர்த்தி தலைமையிலான காவலர்கள் தீயிலிட்டு எரித்துள்ளனர்.