வெண்தோல் நோய் பாதிப்பு எவ்வாறு கண்டறியப்படுகிறது?

63பார்த்தது
வெண்தோல் நோய் பாதிப்பு எவ்வாறு கண்டறியப்படுகிறது?
அல்பினிசம் எனும் வெண்தோல் நோயின் பாதிப்பை பரிசோதனைகள் மூலம் மருத்துவர்கள் மட்டுமே உறுதி செய்ய முடியும். நாமே சுயபரிசோதனை செய்து கண்டுபிடிக்க முடியாது. அதன்படி மருத்துவர்கள் தோல், முடி மற்றும் கண்களை முதலில் ஆய்வு செய்வார்கள். இருப்பினும் மரபணு சோதனை மிகவும் துல்லியமான முடிவுகளை வழங்குவதோடு நோய் பாதிப்பையும் உறுதி செய்ய உதவும். இதன் மூலம் எந்த வகையான அல்பினிசம் நோய் உள்ளது என்பதையும் கண்டுபிடிக்க முடியும்.