சென்னை மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்வில் 5 பேர் உயிரிழந்ததற்கு வெயில்தான் காரணம் என சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் விளக்கமளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், “விமான சாசகத்தின்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. குடை, தண்ணீருடன் வர வேண்டும் என விமானப் படை கூறியிருந்தது. 5 பேரும் உயிரிழந்த நிலையிலேயே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 7 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்” என்றார்.