மயிலாடுதுறையில் உள்ள கிறிஸ்தவ சபையில் மதபோதகராக இருப்பவர் விஜயேந்திரன்(58). சபைக்கு வரும் 38 வயது மதிக்கத்தக்கப் பெண்ணுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அடிக்கடி வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வலியை போக்குவதாக கூறி வீட்டிற்கும் அப்பெண்ணை அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார். நடந்ததை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இந்நிலையில் அப்பெண் புகார் அளித்ததை அடுத்து விஜயேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார்,