மகாராஷ்டிரா: 3 குழந்தைகளுக்கு தாயான 36 வயது பெண்ணுக்கும், 16 வயது பள்ளி மாணவனுக்கும் இடையே காதல் ஏற்பட்ட நிலையில் ஓராண்டுக்கு முன்னர் வீட்டை விட்டு ஓடினர். ஆனால் சில நாட்களில் குடும்பத்தார் கண்டுபிடித்த நிலையில் 4 மாதங்களுக்கு முன் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினார்கள். போலீசாரின் தீவிர விசாரணையை தொடர்ந்து இருவரும் தற்போது சிக்கினார்கள். பெண் கைதான நிலையில், மாணவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.