நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மாற்றுக் கட்சியை சேர்ந்த 3000 பேர் திமுகவில் இணைந்தனர். நாதகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செயல்பாடுகளால் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, பல மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் அக்கட்சியில் இருந்து விலகினர். இதைத்தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நாதகவை சேர்ந்த 51 மாவட்ட நிர்வாகிகள் உட்பட 2,000-க்கும் மேற்பட்டோர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.