நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே 10 வயது சிறுமி உட்பட 3 பேரை ஐடி ஊழியர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை செந்தில் குமார் கத்தியால் வெட்டியுள்ளார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு தடுக்க வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த தங்கராசு, முத்துவேலுவையும் செந்தில் குமார் அரிவாளால் வெட்டியுள்ளார். இதையடுத்து, காயமடைந்த சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீஸ் விசாரணையில் செந்தில் குமார் மன நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.