இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி திணிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் மத்திய அரசு பதிலளிக்க இன்று (ஆக.7) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறி, இந்த 3 சட்டங்களுக்கும் இந்தியில் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழர்கள் மீது இந்தி திணிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.