2-வது டெஸ்ட் கிரிக்கெட்.. இந்தியா வெற்றி

64பார்த்தது
2-வது டெஸ்ட் கிரிக்கெட்.. இந்தியா வெற்றி
வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. 95 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, வெற்றிவாகை சூடியது. 2 நாட்கள் மழையால் போட்டி தடைப்பட்டபோதும், 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி அசத்தியுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா - வங்கதேசம் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அக்டோபர் 6ம் தேதி தொடங்குகிறது.

தொடர்புடைய செய்தி