திருமணமான ஆணுடன் காதல்.. இன்ஸ்டாவில் அட்வைஸ் கேட்ட பெண்

576பார்த்தது
திருமணம் மற்றும் மனநல ஆலோசகருமான காமாக்‌ஷி ரஹேஜா என்பவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “இது ஒரு பெண்ணின் உண்மை கதை என்றும், அந்த பெண்ணுக்கு உதவுங்கள்” என்றும் பதிவிட்டுள்ளார். மேலும், அந்த வீடியோவில், “தனது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியற்று இருக்கும் ஒரு நபருடன் காதலில் விழுந்து விட்டேன். அந்த நபர் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, என்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார். நானும் விவாகரத்து பெற்றவர். ஆனால், அவர்களது விவாகரத்துக்கு நான் தான் காரணம் என்பதை நினைத்து வருந்துகிறேன். என்னால் முடிவு எடுக்க முடியவில்லை. நான் என்ன செய்ய?” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி